12ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் காத்திருக்கும் வேளையில் வாய்ப்பு!

0
150

இந்தியன் ரயில்வேயில் இருக்கின்ற பணியிடங்களை நிரப்பும் ரயில்வே வேலைவாய்ப்பு அலுவலகம் தென்கிழக்கு மத்திய ரயில்வே பிலஸ்பூரில் இருக்கின்ற நிலை 5,4,3 மற்றும் 2 காலி பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. . பல வகையான விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணி நிலைகள் பணியிடங்கள் சம்பளம்
’பிரிவு – சி’நிலை 5 /நிலை 4 5 ரூ.29,200-92,300/- அல்லது ரூ.25,500-81,100/-
’பிரிவு – சி’நிலை 2 /நிலை 3 16 ரூ.21,700-69,100/- அல்லது ரூ.19,900-63,200/-

விளையாட்டு பிரிவுகள் :
குத்துச்சண்டை, கைப்பந்து, கோ கோ, குண்டு எறிதல், கூடைப்பந்து, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், கிராஸ் கண்டிரி மற்றும் எடை தூக்குதல்.

வயதுவரம்பு

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வயதுவரம்பு 18ல் இருந்து 25 வயது வரையில் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

பணி தகுதி
நிலை 5 சம்பளப் பணி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
நிலை 4 சம்பளப் பணி பட்டப்படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு சான்றிதழ்.
நிலை 2 மற்றும் நிலை 3 சம்பளப் பணி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணிக்கு தகுதியானவர்கள் ட்ரயல் தேர்வு மற்றும் கல்வி மற்றும் விளையாட்டு துறையில் படைத்த சாதனை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தியன் ரயில்வே பணியில் இணைவதற்கு ஆர்வமாக உள்ள விளையாட்டு வீரர்கள் இந்த பணிகளுக்கு secrindianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்னர் தேவையான தகுதி மற்றும் விதிமுறைகளை படித்து அதன் பிறகு விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

நிகழ்வுகள் தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள் 26.11.2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள் 25.12.2022
திறன் தேர்வு நடைபெறும் மாதம் டிசம்பர் 22 அல்லது ஜனவரி 2023

Previous articleவீட்டில் இருக்கும் பொட்டு கடலையில் இப்படி ஒரு மகத்துவமா?? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!!
Next articleஒரே பெயரில் 5 மின் இணைப்புகள் இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? – செந்தில் பாலாஜி!!