ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்த 27 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

0
249

கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும் சிவகங்கை, நாமக்கல், கரூர், தர்மபுரி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழை வாய்ப்புக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இந்த நிலையில், கனமழையின் காரணமாக, தமிழகத்தில் 22 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

சிவகங்கை, கரூர்,தர்மபுரி,நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு வரையில் வழிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை நாமக்கல் கரூர் தர்மபுரி திண்டுக்கல் போன்ற ஐந்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிரப்பித்துள்ளனர்.

அதேபோன்று புதுச்சேரியிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Previous articleபெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் உறவு… இலங்கை வீரர் குணதிலக பற்றி வெளியான அடுத்த அதிர்ச்சி செய்தி!
Next articleசிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! கட்டணமில்லா பயிற்சி நுழைவு தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு!