விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

Photo of author

By Janani

விஜய்க்கு எதிராக அஜித்தை தட்டி தூக்கிய திமுக! அதிரடி அரசியல் வியூகம்

நடிகர் அஜித்தின் திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு ரசிகர்கள் எதிர்பார்த்த படி எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு அவர் நடிப்பில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதனையடுத்து மேலும் ஒரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த திரைப்படத்திற்கு தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அவருக்கு சம்பளமாக ரூபாய் 200 கோடியை முன்கூட்டியே வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி ரிலீஸ்:

அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி “விடாமுயற்சி” திரைப்படம் வெளியாக உள்ளது. அஜித் ஆக்சன் ஹீரோவாக மிரட்டிய இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.அஜர்பைஜான் நாட்டில் முழுவதும் எடுக்கப்பட்ட இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் ஆரவ் மற்றும் ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

குட் பேட் அக்லி ரிலீஸ்:

இதனையடுத்து இவர் நடிப்பில் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு அஜித் ரூபாய் 165 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அக்டோபர் மாதம் வரை எந்த திரைப்படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று அஜித் கூறியுள்ளார். அப்போது அவர் கார் ரேஸில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து உருவாகும் அஜித்தின் 64 வது படத்தை சிறுத்தை சிவா இயக்குவதாக கூறிய நிலையில் தற்போது விஷ்ணுவரதன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான பில்லா மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கு பின்பு அஜித் விஷ்ணுவரதன் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக நடிகர் அஜித்துக்கு 200 கோடியை சம்பளமாக பேசி அவரின் கால்ஷீட் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்திற்கு 165 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் அஜித்திற்கு 35 கோடியை அதிகமாக 200 கோடி கொடுத்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் உறுதி செய்தது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் முதல் மாநாட்டிலேயே திமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில் அரசியல் களம் பரபரப்பானது. இந்நிலையில் விஜய்க்கு திமுக தரப்பில் எந்தவித பதிலடி தரப்படும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் நடிகர் அஜித்துக்கு அதிக சம்பளம் கொடுத்து கால்ஷீட் பெற்றுள்ளது அவரின் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்கும் அரசியல் வியூகமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.