சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்!

Photo of author

By Pavithra

சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்!

Pavithra

சேலத்தில் பல கோடி ரூபாய் செம்மண் திருட்டு:!! மக்களுக்கு ஆளும்கட்சி மிரட்டல்!

தமிழக முதல்வர் பழனிச்சாமி பிறந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் செம்மண் கொள்ளை நடைபெற்று வருவதாகவும் இதனை தட்டி கேட்பவர்களுக்கு ஆளுங்கட்சி மிரட்டல் விடுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பக்கநாடு கிராமம்,ஆனை பள்ளம்,கல்லுரல் காடு,
கரட்டூர்,ஆடுவா பட்டி,மேட்டு தெரு,செங்குட்டை பட்டி, ஆகிய பகுதிகளில் செம்மண் வளம் அதிகம் நிறைந்துள்ளது.
அங்குள்ள விவசாய பொதுமக்கள் அனைவரும்,இந்த செம்மண் வளம் நிறைந்த விவசாய பூமியை மட்டுமே நம்பி உள்ளனர்.ஆனால் அங்குள்ள அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை கொண்டு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஏரி வாய்க்கால் என பல்வேறு பகுதிகளில்,பல்லாயிரம் கோடிக்கணக்கான ரூபாயில் செம்மண் திருட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இதனை தட்டி கேட்கும் விவசாய பொதுமக்களை,
அரசியல்வாதிகள்,தாங்கள் ஆளும் கட்சி என்ற தோரணையில் அவர்களை மிரட்டுவதாகவும் இதனை அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சேலம் மேற்கு மாவட்ட திமுக பொருப்பாளர் செல்வகணபதி,மாவட்ட துணை செயலாளர் சம்பத்,இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு,செம்மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.இவ்வாறு புகார் அளித்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாங்கள் நீதிமன்றத்தை நாட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.