முடியலப்பா அடச்சே எதுக்கெல்லாம் ஒத்திகை என்று விவஸ்தை இல்லையா? இந்தியாவில் இருக்கும் நூதன வழக்கம்!

Photo of author

By Sakthi

காலம் மாற மாற நானும் அதற்க்கு ஏற்றார் போல மாறி விட வேண்டும் இல்லையேல் நம்மை ஓரம் கட்டி விடுவார்கள் என்பது போல ஒரு பழமொழி இருந்து வருகிறது.என்னதான் காலங்கள் மாறினாலும் மரபுகள் எப்போதும் மாறுவதில்லை அவ்வாறு மரபுகள் மாறினாலும் அதனை பொதுமக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.

நமக்கு முன்பின் அறிமுகமில்லாத மற்றும் அனுபவமில்லாத செயல்களில் ஈடுபடும்போது அந்த செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னதாக ஒத்திகை பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அவ்வாறு ஒத்திகை பார்த்து அதன்பிறகு அந்த செயலில் நாமும் ஈடுபட்டால் தான் அதில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியும்.ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் எதற்கெல்லாம் ஒத்திகை பார்ப்பது என்று ஒரு வரைமுறையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

அந்தவகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முரியா மற்றும் கோண்ட் என்ற பழங்குடி இன மக்கள் இடையே திருமணத்திற்கு முன்பாக பலருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறதாம்.

அந்த மக்கள் கோட்டூல் என்ற ஒரு இடத்தை அமைத்திருக்கிறார்கள். அங்கே திருமணம் ஆகாத அல்லது திருமணம் நிச்சயம் செய்யப்படாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அங்கே செல்லும் ஆண் அல்லது பெண் உள்ளிட்டோர் தனக்கு விருப்பமான நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று தெரிகிறது. யார் யாருடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என எந்த ஒரு தடையும் கிடையாது என தெரிகிறது.

அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதை கடந்த யார் வேண்டுமானாலும் அந்த இடத்திற்குள் செல்லலாமாம் குறிப்பாக கோண்ட் இன மக்களை விட முரியா இன மக்கள்தான் இந்த நடைமுறையை இன்றளவும் வழக்கத்தில் வைத்திருக்கிறார்களாம்.

இந்த இன மக்கள் சத்தீஸ்கரில் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கும் இந்த வழக்கம் இருந்து வருகிறது.

இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் சிறுவயது உடலுறவை பொதுமக்கள் தீவிரமாக எதிர்த்து வரும் சூழ்நிலையில், இவ்வாறு ஒரு வழக்கம் இந்தியாவில் இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.