நிவாரணம் அரசியல் கருவி அல்ல மனிதாபிமான கடமை.. கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!!

0
75
Relief is not a political tool but a humanitarian duty.. Kanimozhi MP insists!!
Relief is not a political tool but a humanitarian duty.. Kanimozhi MP insists!!

DMK BJP: தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிவாரண தொகை குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி. நெல்லையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் ஆய்வுக்குழு தமிழகத்தில்  நிலவும் நிலைமையை நேரில் ஆய்வு செய்து, இம்முறை மாநில அரசு கோரும் முழுமையான நிவாரணத் தொகையை வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் மத்திய அரசிடம் நிவாரணம் கோருகிறார். ஆனால், மத்திய அரசு முழுமையான தொகையை வழங்காமல், கிள்ளிக் கொடுப்பதை போல் சிறிதளவே நிதி ஒதுக்குகிறது என கனிமொழி குற்றம்சாட்டினார். இதனால், இயற்கை விபத்துகள் மற்றும் பஞ்சம் போன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் ஏழை மக்கள் எந்தவித நிவாரணமும் உண்மையாகப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசு நிவாரண தொகை வழங்கும் போது, மக்களின் துன்பங்களையும் நிஜ நிலவரங்களையும் முழுமையாக கணக்கில் எடுக்காமல் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். நிவாரணம் அரசியல் பார்வையோ அல்லது வாக்கு வங்கி கணக்கீட்டையோ அடிப்படையாக கொண்டு  இருக்கக் கூடாது. உண்மையான மனிதாபிமான எண்ணத்தோடு மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் வழங்கப்பட வேண்டும் எனவும் கனிமொழி வலியுறுத்தினார்.

மேலும், பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார். பீகார் தேர்தலை பொறுத்திருந்து பார்ப்போம். ஜனநாயகம் வெல்ல வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. நம்பிக்கையோடு காத்திருக்கிறோம், எனக் கூறிய அவர், அரசியல் மாற்றம் மக்களால் தீர்மானிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கனிமொழியின் இந்தக் கருத்துக்கள், மத்திய அரசின் நிவாரண கொள்கைகளை எதிர்த்தும், தமிழக அரசின் கோரிக்கைக்கு ஆதரவாகவும்,  பார்க்கப்படுகின்றன.

Previous articleடிடிவி தினகரனை நோஸ்கட் செய்த ஆர்.பி. உதயகுமார்.. இதெல்லாம் தேவையில்லாத கேள்வி!!
Next articleடிடிவி தினகரனுடன் இணையும் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி.. ஒரே கருத்தை முன் வைப்பதாகவும் விமர்சனம்!!