சிவன் மலை கண்ணாடி பெட்டியில் வைத்த பரிகார பொருள்! பலன் என்ன?

0
207
Remedy item placed in Shiva mountain glass box! What is the benefit?
Remedy item placed in Shiva mountain glass box! What is the benefit?

சிவன் மலை கண்ணாடி பெட்டியில் வைத்த பரிகார பொருள்! பலன் என்ன?

திருப்பூர் பகுதியில் காங்கேயம் என்ற இடம் உள்ளது. அங்கு சிவன்மலை என்ற இடத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி என்று ஒன்று உள்ளது. அங்கு ஒவ்வொரு வருடமும் ஒரு பொருள் வைக்கப்படும். அப்படி தற்போது அதிலிருந்த பொருள் எடுக்கப்பட்டு விட்டு வில் மற்றும் அம்பை வெள்ளியினால் செய்து வைத்துள்ளனர். அதற்கு பூஜையையும் மேற்கொண்டனர்.

இந்தக் கோவில் சிவவாக்கிய சித்தர் ஆல் பாடல் பெற்ற தலமாகும். எனவே இது மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கிறது. இதில் உள்ள பெட்டியில் நாம் வைக்கும் பொருட்களை பொறுத்து, அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொரு உலக நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றன. இது பலருக்கு அதிசயத்திலும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இறைவன் நமக்கு அறிகுறிகளை முன்னமே உணர்த்தி வருவதாக ஒரு ஐதீகமும் சொல்லப்படுகிறது.

எனவே காரணமூர்த்தி என்றும் சொல்கிறார்கள். இந்த இறைவன் பக்தர்களின் கனவில் வந்து ஏதாவது ஒரு பொருளை கொண்டு வந்து அந்த பெட்டியில் வைக்க சொல்வதாக ஒரு பாரம்பரியம் இங்கு உள்ளது. அந்த வகையில் இறைவன் குறிப்பால் உணர்த்திய பொருளை செய்து வரும் பக்தர்களிடம் இருந்து அதை வாங்கி வைத்துவிட்டு கோவிலில் இருக்கும் குருக்கள் அங்கு பூப்போட்டு பார்ப்பார்கள்.

அதில் ஆண்டவனின் முடிவு தெரிந்துவிடும். வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து பூ போட்டு பார்க்கும் போது வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்தப் பொருள் அந்தப் பெட்டியில் வைக்கப்படும். இது தொன்றுதொட்டு செய்யப்படும் வழக்கம் என்றும் கூறுகிறார்கள். இது வரை இங்கு மண், தங்கம், ரூபாய் நோட்டுகள், நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, துப்பாக்கி, ஏர், கலப்பை, சர்க்கரை, தெய்வ ஜாதகம் மற்றும் குங்குமம் போன்றவற்றை அந்த கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பூஜை செய்துள்ளனர். நீர் வைக்கும்போது சுனாமி வந்ததும், தங்கம் வைக்கும் போது தங்கத்தின் விலை உச்சம் தொட்டதும், மண் வைத்து பூஜை செய்யும்போது மண் நிலங்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.

அதுபோல் இறைவனின் நாசுக்கான இந்த பொருட்களை வைத்து வழிபடுவதன் காரணமாக இதில் வைக்கப்படும் பொருளினால் சமுதாயத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரூபாய் வைக்கும் போது ரூபாயின் மதிப்பு இஇழந்து போனதும் குறிப்பிடத்தக்கது. இன்றுவரை உத்தரவு பெட்டியில் இருந்த பொருட்கலான பச்சை வேட்டி, துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பு இழந்த 500 ரூபாய் 2 மற்றும் 5,2,1 ரூபாய் நாணயம் என மொத்தம் ரூ.1008, இரண்டு ராசி கட்டங்கள், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை, பூ, பாக்கு ஆகியவற்றை எடுத்துவிட்டு  திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து  ரேணுகா தேவி என்ற பெண் கொண்டு வந்த வில் மற்றும் அம்பு அந்த கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப் பட்டுள்ளது. இதன் பலன் என்னவென்று பொருத்திருந்து பார்க்கலாம்.

Previous articleபானி பூரியால் வீட்டில் தலைதூக்கிய பிரச்சனை! மனைவியின் பரிதாப நிலை!
Next articleநான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இளைஞர்!