உடனடியாக வேலை கிடைக்க வேண்டுமா? அப்படியென்றால் இதை உடனே செய்யுங்கள்!

Photo of author

By Sakthi

நன்றாக படித்து முடித்த பிறகு எல்லோரும் உடனடியாக வேலைக்கு சென்று விடுவதில்லை, படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்க பல வருட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும், தற்போது ஏற்பட்டு வருகிறது.

ஆகவே நமக்கு சிறப்பான கல்வி அமையவும், நல்ல வாய்ப்பு கிடைக்கவும், நம்முடைய முன்னோர்களின் புண்ணிய பலனும், தெய்வ அருட்கடாட்சியமும், அவசியம் என சொல்லப்படுகிறது.

அம்மன் அல்லது அம்பாள் தெய்வ வழிபாடு நம்முடைய கோரிக்கைகள் விருப்பங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நிறைவேற்றும் சக்தியாக இருக்கிறது.

எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தினத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபாடு செய்வது நல்லது. அதோடு அம்மனுக்கு ஏதாவது ஆபரணம் செய்து அணிவிப்பதும் நல்ல பலன்களை கொடுக்கும்.

மேலே சொல்லப்பட்ட முறையில் அம்மனுக்கு புடவை மற்றும் ஆபரணம் சாற்றி வழிபடுபவர்களின் வம்சத்தில் இருக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் நல்ல முறையில் கல்வி கற்று சிறப்பான வகையில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

அதோடு மிக நீண்ட காலமாக தகுதியான வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல வேலை அம்பாளின் அனுகிரகத்தால் கிடைக்க பெறுவார்கள்.