வீண் விரயத்தை குறைக்கும் பரிகாரம்!

0
178

வீண் செலவு, தண்ட செலவு, விரைய செலவு என்று நம்முடைய வருமானத்திலிருந்து ஒரு தொகை கண்டிப்பாக செலவாகும். இப்படிப்பட்ட வீண், விரைய செலவுகளை குறைக்க நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள் இரண்டு படிகாரம், மைசூர் பருப்பு ஒரு சிவப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு சிறிய கட்டி படிகார துண்டு வைத்து விடுங்கள். ஒரு கைப்பிடி மைசூர் பருப்பையும் வைத்துவிட்டு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை விரைய செலவாகும் குறிப்பிட்ட அந்த பொருளுக்கு சுற்றி போட வேண்டும்.

உதாரணத்திற்கு தங்களுடைய இருசக்கர வாகனம் அடிக்கடி செலவு வைப்பதால் அந்த பைக்கை இந்த சிவப்பு முடிச்சியை கொண்டு சுத்தி போடுங்கள். வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களுக்கு கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து அவர்களுடைய தலையை 3 முறை சுற்றி விடுங்கள்.

தங்களுடைய வீட்டுக்கு நேரம் சரியில்லையா? தங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களுமே வீண் விரைய செலவுகளை கொடுக்கிறதா? தங்களுடைய நிலை வாசல் படித்து வெளியில் நின்று உங்கள் வீட்டிற்கு திருஷ்டி கழிப்பதை போல இந்த முடிச்சை வைத்து திருஷ்டி கழித்து விடுங்கள்.

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையில் செய்யலாம். மாலை நேரத்தில் பரிகாரம் செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால் அமாவாசை தினத்தில் செய்யலாம். மாதம் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து வந்தால் வீண் ,விரைய செலவுகள் குறையும்.

Previous articleஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை!
Next articleகற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!