தமிழகத்தில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2ம் தேதி குடியரசு தினமான ஜனவரி மாதம் 26ஆம் தேதி சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி, உள்ளிட்ட தினங்களில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற கிராம சபைகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு அந்த பகுதியில் இருக்கின்ற குறை, நிறைகளை தெரிவிக்கும் நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அந்த வகையில், குடியரசு தினமான இன்றைய தினம் தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மறுபடியும் அதிகரித்து இருக்கிறது.
நோய் தொற்று வராமல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது இந்த நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
அதோடு அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தக் கூடாது என்று பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.