கடும் பனிப்பொழிவால் சென்னை வாசிகள் அவதி!!

0
191

கடும் பனிப்பொழிவால் சென்னை வாசிகள் அவதி!!

சென்னையில் இன்று அதிகாலை பெய்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதைக்குள்ளாகினர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதலே பெய்து வருகிறது. இருப்பினும் போதிய மழை இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.மார்கழி மாதம் தொடங்கிய சில நாட்களிலேயே பனிபொழிவு அதிகமாக இருப்பதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. குறிப்பாக தேனாம்பேட்டை, தியாகராய நகர், அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த கடும் பனியால் சாலைகள் முழுவதும் புகை சூழ்ந்தது போல் காட்சியளித்தது.இதனால் வாகன ஓட்டிகள் சற்று அவதிக்குள்ளாகினர்.

தெற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மீதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.மழை மற்றும் பனிப்பொழிவினால் அதாவது மாறி மாறி வரும் வானிலையின் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Previous articleமுதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த பேருந்துக்கு பதில் இதுதான் இயக்கப்படும்!
Next article2020 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் இந்த தேர்வை எழுத வாய்ப்பில்லையா! தேசிய தேர்வுகள் முகமை அளிக்கும் பதில்!