ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 6 மாத காலமே உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் இபிஎஸ் அதிமுகவின் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் இபிஎஸ்யின் தலைமையில் நம்பிக்கையில்லாத பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களும் அதிமுகவிலிருந்து பிரிந்து வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். இவையெல்லாம் பல வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுகவின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இழக்க காரணமாக அமைந்து விட்டது.
இதுவே அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும் வகையில் நால்வர் அணி உருவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய திருப்பமாக புதுச்சேரி முதலியார் பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கரன் அதிமுகவிலிருந்து திடீரென விலகியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய அவர், இனி கட்சி பணிகளை தொடர முடியாத காரணத்தினால், அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் கைவிடுவதாக அறிவித்திருக்கிறார்.
இவரின் இந்த ராஜினாமா கடிதம் ஒரு அரசியல் சமிக்கையாகவே பார்க்கபடுகிறது. இவரின் இந்த விலகளுக்கு அதிமுக தலைமையின் மேல் உள்ள அதிருப்தியே காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். எம்.ஜி. ஆர். ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக தற்போது இல்லையென்று கூறி பலரும் திமுக இணைந்ததால், அடிப்படை உறுப்பினர் பதவியையும் துறந்த பாஸ்கரனும் கூடிய விரைவில் திமுகவில் இணைவார் என்று யூகிக்கப்படுகிறது. இவரின் இந்த திடீர் முடிவு அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

