dmk: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கிய எதிர்த்து சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர இருப்பதாக அப்பாவு முடிவு.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலை குன்றுகளில் கனிம வளங்களை எடுக்க மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அரிட்டாபட்டியில் உள்ள மலைக்குன்றுகள் வரலாறு சிறப்பு மிக்க இடங்கள் உள்ளது.
மேலும், பாண்டிய மன்னர்கள் காலத்து குடைவரை கோயில்கள், சிற்பங்கள், சமண சின்னங்கள் ,தமிழ்பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல்படுக்கைகள் ஆகியவைகள் உள்ளன. மேலும் பல்லுயிர் பெருக்க வரலாற்று ஸ்தலம் ஆகும். மேலும் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள் வணிக ரீதியாக சுரங்கம் அமைத்தால் அது அவர்களை பாதிக்கும்.
அதனால் ஒரு போதும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் திமுக அரசுதான் மத்திய அரசிடம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வாங்கியதாக சர்ச்சைகள் எழுந்தது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் திமுக அரசு மீது இது தொடர்பாக குற்றச்சாட்டுகள் வைத்தார். இதற்கு முன்பாகவே பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வருகிற டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சட்டமன்ற கூட்டம் நடைபெறுகிறது. அதில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்து அனுமதியை ரத்து செய்யவும், தீர்மானம் நிறைவேற்ற போவதாக அப்பாவு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.