ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு… அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட அரசு… 

0
88

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு… அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட அரசு…

குழந்தைகள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது குழந்தைகள் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டும்தான் ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அனைவரும் இந்த புதிய தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக மாறிவிட்டோம். இதில் கொடுமை என்ன என்றால் சிறு குழந்தைகளும் இந்த தொழில்நுட்பம் நிறைந்த உலகில் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக வாழ்வது தான்.

அதாவது பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைகள் கூட தற்போதைய காலத்தில் செல்போன்கள் இல்லாமல் இருப்பது இல்லை. நாம் கூட செல்போன் இல்லாமல் ஒரு நிமடம் அமைதியாக இருப்போம் என்று சொல்லிவிட முடியாது.

குழந்தைகள் அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனால் சீன.அரசாங்கம் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை சீன அரசாங்கம் கடந்த புதன் கிழமை அதாவது ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியிட்டது. குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “16 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளுக்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தக் கூடாது. 8 வயது முதல் 15 வயது வரை குழந்தைகள் 1 மணி நேரம் மட்டும் தான் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டும். அது போல 8 வயதுக்கும் குறைவான குழந்தைகள் 40 நிமிடங்கள் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எல்லாரும் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை இணைய சேவையை பயன்படுத்தக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அரசு அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறைகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்க செப்டம்பர் மாதம் 2ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வருவது பற்றி முடிவு செய்யப்படும். கடந்த 2019ம் ஆண்டில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 90 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் கேம் விளையாடக் கூடாது என்று விதிமுறையை சீன அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.