கடந்த மே 1ம் தேதி இரண்டு நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியானது. ஒன்று சூர்யாவின் ரெட்ரோ. அடுத்து சசிக்குமார் நடிப்பில் உருவான டூரிட்ஸ் ஃபேமிலி. ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால, கடந்த பல வருடங்களாகவே அவரின் படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை.
ரெட்ரோ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு, கோடை விடுமுறை காரணமாக தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் இந்தியாவில் 43 கோடியும், இந்திய அளவில் 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்து புதுமுக இயக்குனர் அபிஷன் இயக்கியுள்ள டூரிஸ்ட் படமும் 1ம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து முறைகேடாக படகில் தப்பில் சென்னை வந்தும் குடும்பம் சந்திக்கும் பிரச்சனையை இப்படம் பேசுகிறது. சிரிப்பும், எமோஷனலும் கலந்த படமாக டூரிஸ்ட் ஃபேலிமிலி உருவாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்த படம் வெளியாகி 4 நாட்களில் இந்தியாவில் 10 கோடியும், வெளிநாடுகளில் 2.31 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 16 கோடி என சொல்லப்படும் நிலையில் கண்டிப்பாக இப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தையே கொடுக்கும் என சொல்லப்படுகிறது.