2வது நாளிலேயே வசூல் குறைஞ்சிடுச்சே!.. மெட்ரோ கலெக்‌ஷன் ரிப்போர்ட் இதோ…

0
15
retro
retro

கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 1ம் தேதி வெளியான ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால், கடந்த பல வருடங்களாகவே அவரின் படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை.இந்த படம் நேற்று ஒரு நாளில் 20 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ரெட்ரோ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு, கோடை விடுமுறை காரணமாக தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் இப்படம் 46 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அதேநேரம், படம் வெளியாகி 2ம் நாளான நேற்று இப்படம் தமிழகத்தில் 7.50 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. முதல் நாள் தமிழகத்தில் 17.50 கோடி வசூலான நிலையில் அதில் பாதியை கூட நேற்று இப்படம் தமிழ்நாட்டில் வசூலிக்கவில்லை. அதேநேரம், சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் வருவதால் வசூல் அதிகரிக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது.

Previous articleலோகேஷ் கனகராஜ் எடுக்கும் புதிய அவதாரம்!. இவருக்கும் அந்த ஆசை இருக்கா?!..
Next articleஆயிரம் கோடி பட்ஜெட்!. தொடர்ந்து 10 படங்கள்!. லைக்கா போடும் பக்கா ஸ்கெட்ச்!..