சிறப்பான தரமான சம்பவமெல்லாம் இனி பார்ப்பீங்கடா!. ரெட்ரோ பட டிரெய்லர் வீடியோ!..

Photo of author

By அசோக்

சிறப்பான தரமான சம்பவமெல்லாம் இனி பார்ப்பீங்கடா!. ரெட்ரோ பட டிரெய்லர் வீடியோ!..

அசோக்

retro

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கன்னிமா பாடல் லிரிக் வீடீயோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சந்தோஷ நாராயனணே இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இப்பாடலை புரமோஷன் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டார்கள். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. 18ம் தேதியான இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

தற்போது டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களை செய்யும் சூர்யா அதிலிருந்து மாற நினைக்கிறார். ஆனால், சூழ்நிலையும், வில்லன் குரூப்பை அவரை மாற விடாமல் தடுப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. டிரெய்லர் முழுக்க சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. கங்குவா படம் சூர்யாவுக்கு தோல்வியாக அமைந்த நிலையில் ரெட்ரோ படம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ரெட்ரோ டிரெய்லர் வீடியோ சூர்யா ரசிகர்களை கவர்ந்துள்ளது.