ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருவதுடன், மக்கள் மனதிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் தற்போதைய அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்று பலரும் கூறுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இபிஎஸ்யின் செயல்பாடும் உள்ளது. அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்டவர்களை கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது அக்கட்சிக்கு பேரிழப்பை ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர்.
ஆனாலும் இபிஎஸ்க்கு தனது பதவி மேல் இருக்கும் ஆசையால் தொடர்ச்சியாக பலரையும் நீக்கி வந்தார். அதிலும் முக்கியமாக அவரை முதல்வராக்கிய சசிகலாவையும், மற்றும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை நீக்கினார். இது மக்கள் மத்தியில் பேசுபொருளானது. இது மட்டுமல்லாமல் அதிமுகவின் மூத்த அமைச்சரான செங்கோட்டையனும் நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் நால்வரும் பாஜக உடன் மிகவும் இணக்கமாக இருப்பதால் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால் இபிஎஸ் அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிட கூடாது என கறாராக கூறி விட்டதாக தகவல் கசிந்தது.
இந்நிலையில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதையை செலுத்த வந்த சசிகலாவிடம், அதிமுகவிற்கு அமித்ஷா தான் ஒருங்கிணைப்பாளரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படி தேர்தல் வியூகம் வகுக்கிறார்கள் என்பதிலும் தேர்தல் நேரத்தில் தெரியவரும். நீங்கள் மக்கள் பிரச்சனையை பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை அமித்ஷா தான் மேற்கொண்டு வருகிறார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

