மீண்டும் இணைத்த ஜோடி! ரசிகர்களின் மகிழ்ச்சி!

0
79
Reunited couple! Delight the fans!
Reunited couple! Delight the fans!

மீண்டும் இணைத்த ஜோடி! ரசிகர்களின் மகிழ்ச்சி!

மக்களின் மனதில் எப்போதுமே சினிமா பிரபலங்களுக்கு தனி இடம் உள்ளது. அதை ஒவ்வொரு புதுப்பட வெளியீட்டிலும் கண் கூடாக காணலாம். மக்களிடம் என்றுமே அவர்களுக்கு தனி இடம் உள்ளது.

சினிமாவில் நடிப்பவர்கள் பலர் காதலின் மூலம் இணைவதும் பிறகு சில வருடங்கள் கழித்து பிரிவதும் இந்த துறையில் பெரும்பாலும் நடக்கும் கதைதான். உதாரணத்திற்கு ராம ராஜன் மற்றும் நளினி, பார்த்திபன் மற்றும் சீதா, ஜோடிகள் போன்றவையும், வெற்றி பெற்ற பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா, சூர்யா மற்றும் ஜோதிகா போன்றோரும் உள்ளனர்.

அந்த வகையில் நடிகர் ரஞ்சித்தும், பிரியா ராமனும் காதலித்து கடந்த 1999 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிரியா ராமன் அவர்கள், 1993-ல் ரஜினிகாந்த் தயாரித்து நடித்த வள்ளி படத்தில் அறிமுகமாகி பின் சூர்யவம்சம், பொன்மனம், அரிச்சந்திரா, புதுமைப்பித்தன், நேசம் புதிது, சின்னராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

மேலும் இவர் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் ரஞ்சித்தும் 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். சிந்துநதி பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், நட்புக்காக, தேசிய கீதம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், சில வருடங்களுக்கு பிறகு ரஞ்சித்தும், பிரியா ராமனும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு மீண்டும் நட்பானார்கள். ஆனாலும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக கலந்து கொள்ள வில்லை. ஆனால் ரஞ்சித் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நாளையொட்டி பிரியா ராமனுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் அதன் மூலம், நன்றிகள் கோடி தங்கங்களே, என் அன்பு தங்கங்களே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். எங்கள் வாழ்க்கை மிகவும் அழகாகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே என்ற பதிவையும் வெளியிட்டு உள்ளார். விவாகரத்தாகி 7 வருடங்கள் ஆன பிறகு இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் வலைத்தளத்தின் மூலம்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.