ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! அமைதியாக செயல்படக்கூடிய நாள்!

Photo of author

By Selvarani

ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! அமைதியாக செயல்படக்கூடிய நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்படக்கூடிய நாள். பஞ்சமஸ் தானமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் குலதெய்வ பிராத்தனைகளில் ஈடுபடுவீர்கள்.

நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அனுகூலமாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடைபெறுவார்கள். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும் என்றாலும் கவனம் மேற்கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் உள்ள பெண்கள் மனக்குழப்பத்துடன் செயல்படுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில அனுபவங்கள் உங்களுக்கு வந்து சேரும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.