ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

0
257
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் உங்கள் உழைப்பிற்கு ஏற்றபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் தைரியமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழலில் வந்து அமையும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை பற்றி யோசிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆற்றல் தரும் செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! சுப காரியங்கள் கைகூடும் நாள்!
Next articleமிதுனம் ராசி- இன்றைய ராசிபலன் !! குழந்தைகள் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here