தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!!
டிசம்பர் 27-ஆம் தேதி என்று தமிழகம் முழுவதும்,பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
வேலை நிறுத்தத்திற்கான காரணங்களாக தலைவர் எஸ் எம்.ஆர்.குமாரசாமி அவர்கள் கூறியிருப்பது, வேககட்டுப்பாட்டு கருவி தயாரிக்கும் 49 நிறுவனங்களில் 12 நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழகத்தில் தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் மேலும் வாகன உரிமைகள் அனைத்து பகுதிகளிலும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் டீசல் மீதான வாட் வரியை குறைக்க இப்போராட்டத்தை நடத்துவதாக கூறியுள்ளார்.மேலும் இதில் 4.5 இலட்சம் கனரக வாகனங்களும், 10 லட்சம் சிறிய ரக வாகன உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தில் வரும் 29ஆம் தேதி ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.அத்தியாவசிய பொருட்களான பால்,மருந்து பொருட்கள் மற்றும் குடிநீர் வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.இதனால் சுமார் ஆயிரம் கோடி அளவு வரை வருமான இழப்பை ஈடு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.