சானிடைசரை பயன்படுத்தினால் கண்பார்வை போகும் அபாயம்:! எச்சரிக்கும் வல்லுநர்கள்!
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக சானிடைசர் அறிமுகப்படுத்தப்பட்டது.
சானிடைசரை பயன்படுத்தினால்,நம் கையில் தொற்றிக் கொண்ட கொரோனவைரஸ் முற்றிலும் அழிந்து விடுவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதனால் தற்போது அனைவரின் வீடுகளிலும்,பொது இடங்களிலும் சானிடைசர் அத்தியவசிய பொருளாக
மாறியுள்ளநிலையில்,தற்போது இந்த சானிடைசர்களால் குழந்தைகளின் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆபத்து குறித்து பிரான்சிஸ் ஜமா கண் மருத்துவ இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.சானிடைசர் பயன்படுத்தியதனால்,குழந்தைகளின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 232 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முக்கிய இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பொழுது சானிடைசரை கைகளில் பயன்படுத்தி விட்டு, தெரியாமல் குழந்தைகளின் கண்களில் கைகளை வைத்து தேய்க்கும் பொழுது,கண்களில் விஷத்தன்மை பாய்ந்து விடுகிறது என்றும் இதனால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே சானிடைசர்களை பயன்படுத்தும் பொழுது,மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.