மேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை!

Photo of author

By Pavithra

மேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை!

Pavithra

மேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை!

மயிலாடுதுறை அருகே வெகுநாட்களாக எம்சாண்ட் ஏற்றிக் கொண்டு செல்வது போன்று ஆற்று மணலை கடத்திய ஓட்டுநரை கையும் களவுமாக,காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே,எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு மினி லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.ஓட்டுனரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார்,லாரியில் இருந்த எம்சாண்ட்-யை பரித்து பார்த்துள்ளனர்.
அப்பொழுதுதான் அடியில் ஆற்று மணல் கடத்தப்பட்டு மேலே கண்துடைப்புக்காக எம்சாண்ட் துவப்பட்டிருப்பது அம்பலமானது.அந்த ஓட்டுநரை கையும் களவுமாக தனிப்படை போலீசார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்நிலையில் மயிலாடுத்துறை காவல் அதிகாரிகள், அந்த ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து அந்த மணலையும், மினி லாரியை பறிமுதல் செய்து,அந்த ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.