தடுப்பூசி செலுத்திக்கொண்ட சினிமா பிரபலம்!

Photo of author

By Sakthi

தடுப்பூசி செலுத்திக்கொண்ட சினிமா பிரபலம்!

Sakthi

நடிகை ரித்விகா கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்டு இருக்கிறார்.

நாடு முழுவதும் நோய் தொற்று தாக்கம் மிக தீவிரமாக இருப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் ௧௮ வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், திரைத்துறை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், தடுப்பூசி போட்டு கொள்வதுடன் மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள். தற்சமயம் நடிகை ரித்விகா தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன் நீங்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்திருக்கிறார்.

இவர் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸில் பங்கேற்று கொண்டு டைட்டில் வின்னரான பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.