ரிஸ்வான் மற்றும் அப்துல்லா அதிரடி சதம்!!! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!!!

0
117
#image_title

ரிஸ்வான் மற்றும் அப்துல்லா அதிரடி சதம்!!! 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்!!!

நேற்று(அக்டோபர்10) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ரிஸ்வான், அப்துல்லா ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததால் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

நேற்று(அக்டோபர்10) ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது.

இலங்கை அணியில் அதிரடியாக விளையாடிய குஷால் மெண்டிஸ் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். 6 சிக்சர்கள் 14 பவுண்டரிகளுடன் 77 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து குணால் மெண்டிஸ் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய சமரவிக்ரமா சதம் அடித்து 108 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். துவக்க வீரர் பூதம் நிசங்கா அரைசதம் அடித்து 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதனால் இலங்கை அணி 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹாரிஸ் ராப் 2 விக்கெட்டையும், சதாப் கான், முகமது நவாஷ், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

345 ரன்கள் என்று கடினமான இலக்கை கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடங்கிய வீரர் இமாம்உல் ஹக் 12 ரன்களுக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசம் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இதையடுத்து மற்றொரு தொடங்கிய வீரர் அப்துல்லா சபிக்குடன் இணைந்த முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடத் தொடங்கினார். இருவரும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இதனால் இலங்கை அணியின் பக்கம் இருந்த வெற்றி பாகிஸ்தான் அணியிடம் வரத் தொடங்கியது.

சிறப்பாகவும் பொறுமையாகவும் விளையாடிய தொடக்க வீரர் அப்துல்லா சபிக் சதம் அடித்து 113 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க மற்றொரு புறம் முகமது ரிஸ்வான் சிறப்பாக தொடரிந்து சிறப்பாக விளையாடினார்.

தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த முகமது ரிஷ்வான் சதமடித்து 131 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது வெற்றி உறுதியானது. இவருடன் இறுதியில் விளையாடிய சவுத் சகீல் 31 ரன்களும் இப்டிகர் அஹமது 22 ரன்களும் சேர்க்க பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 345 ரன்கள் சேர்த்தது. இதன் மூலமாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

சதம் அடித்து 131 ரன்கள் சேர்த்த முகமது ரிஷ்வான் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் 14ம் தேதி இந்தியா அணியை எதிர் கொள்கின்றது.

Previous articleஉதவி செய்த ஜெயலலிதா.. வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன?
Next articleகாவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!