பெங்களூருவில் ரோட் ஷோ இன்று ஆரம்பம்!! பரப்புரையை தொடங்கிய மோடி!!

Photo of author

By Sakthi

பெங்களூருவில் ரோட் ஷோ இன்று ஆரம்பம்!! பரப்புரையை தொடங்கிய மோடி!!

Sakthi

Updated on:

பெங்களூருவில் ரோட் ஷோ இன்று ஆரம்பம்!! பரப்புரையை தொடங்கிய மோடி!!

பெங்களூருவில் இந்திய பிரதமர் மோடி அவர்கள் கர்நாடக மாநிலம் சட்டப் பேரவை தேர்தலையொட்டி தனது ரோட் ஷோ திட்டத்தின் மூலம் பரப்புரையை இன்று அதாவது மே 6ம் தேதி தொடங்கியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகளும் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் பாஜக கட்சிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து பிரதமர் மோடி அவர்கள் தனது ரோட் ஷோ திட்டம் மூலமாக பெங்களூருவில் பரப்புரையை தொடங்கியுள்ளார்.

பெங்களூருவில் திறந்தவெளி வாகனத்தில் தொடர்ந்து 26.5 கி.மீ தூரம் பிரதமர் மோடி அவர்கள் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இதைத் தொடர்ந்து நாளை அதாவது மே 7ம் தேதி ஞாயிற்றுக் கிழமை பெங்களூரு ஐடி நகரில் தொடர்ந்து 8 கிலோ மீட்டர் தூரம் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று பிரதமர் மோடி அவர்கள் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் இரு புறங்களிலும் மக்கள் திரண்டு மலர்களை தூவி பிரதமர் மோடி அவர்களை வரவேற்று வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களுடன் பெங்களூரு தெற்கு எம்.பி தேஜஸ்வி சூரியா, மத்திய எம்.பி பி.சி மோகன் ஆகியோரும் உள்ளனர்.