சருமம் பொலிவு பெற ரோஜாப்பூ ஃபேஸ் பேக்!

Photo of author

By Sakthi

ரோஜா இதழ்களை பயன்படுத்துவதால் சருமத்திற்கு நாள்முழுவதும் புது பொலிவிருக்கும் அதிலுள்ள ஆன்ட்டி பாக்டீரியல் சருமத்தில் உண்டாகும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. ரோஜாவில் நிறைந்திருக்கும் விட்டமின் சி ஒரு நல்ல ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்று சொல்லப்படுகிறது.

விட்டமின் சியின் முக்கியத்துவம் என்னவென்றால் இது சருமத்திலிருக்கும் செல்களை சேதம் அடையாமல் பாதுகாக்கிறது.

ரோஜா வேனிற் கட்டி வேறு செயல்களில் இருந்து பாதுகாக்கவும் உதவிபுரிகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க ரோஜா உதவிபுரிகிறது மற்றும் உங்களுடைய சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ளவும் இந்த ரோஜா இதழ் உதவி புரிகின்றது.

முதலில் ரோஜா பூவின் இதழ்களை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும், அதன் பிறகு அத்துடன் கோதுமை, தவிடு, பால், உள்ளிட்டவற்றை கலந்து அரைக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.

சூரிய கதிர்வீச்சு காரணமாக, உண்டாகும் சரும பாதிப்புகள் நீங்குவதற்கு ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து இந்த கலவையை சருமத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு நாள்தோறும் செய்து வர சருமம் பளபளப்பாக இருக்கும்.