திமுகவும் இல்லை! ரவுடிசமும் இல்லை!

Photo of author

By Sakthi

10 வருட காலமாக திமுக ஆட்சியில் இல்லாத காரணத்தால் மதுரையில் ரவுடிகளின் அராஜகம் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார் மேலும் மதுரையில் திமுக உள்பட எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார் மதுரை மாவட்ட அதிமுக சார்பாக செல்லூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அதில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜு பங்கு பெற்று உரை நிகழ்த்தினார் அப்போது அவர் தெரிவித்ததாவது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏராளமான திட்டங்களை மதுரை மாநகருக்கு வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் அவர்களுக்கு உதவியாக துணை முதல்வர் அவர்களும் இருந்து வருகிறார் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் சமீபத்தில் கூட சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கின்றது விரைவிலேயே இதை திறந்துவைக்க முதலமைச்சர் மதுரைக்கு வர இருக்கின்றார். இந்தத் திட்டத்தின் மூலமாக மதுரை மாநகராட்சியில் இருக்கின்ற 100 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் திமுக ஆட்சியில் இருந்தவரையில் மதுரை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை மதுரை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக அம்மா 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உதவி செய்தார் ஆனால் திமுக தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 250 ரவுடிகளை தான் தயார் செய்திருந்தது.

ஆனால் தற்போது சாதி மதத்தை முன்னிறுத்தி அதன் மூலம் பிரச்சாரம் செய்து திமுக வெற்றி பெறுவதற்காக வேஷம் போட்டு திரிக்கின்றது கடந்த பத்து வருடங்களாக மதுரையில் ரவுடிகளின் அராஜகம் இல்லவே இல்லை திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகளின் அராஜகம் ஆரம்பித்துவிடும் முதல்வரின் திட்டங்களை கட்சித் தொண்டர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று அதிமுகவை ஒரு மாபெரும் வெற்றிபெற வைக்க வேண்டும் முதலில் கழகத்தை எதிர்த்து போட்டியிடும் அனைத்து எதிர்க்கட்சி வேட்பாளருக்கும் டெபாசிட் இல்லாமல் செய்யவேண்டும் தொண்டர்கள் இரவு-பகல் பாராமல் கட்சிக்காக உழைத்திட வேண்டும் அதற்கான அங்கீகாரத்தை முதல்வரும் துணை முதல்வரும் நிச்சயமாக கொடுப்பார்கள் இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்