புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் ராயல் என்பீல்ட் 350!!! விற்பனை செப்டம்பர் 3ம் தேதி தொடக்கம் !!

0
38

புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் ராயல் என்பீல்ட் 350!!! விற்பனை செப்டம்பர் 3ம் தேதி தொடக்கம்…

முற்றிலும் புதிய அம்சங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராயல் என்பீல்ட் 350 புல்லட் பைக்கின் விற்பனை வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி தொடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராயல் என்பீல்டு அறிமுகம் செய்துள்ள புதிய புல்லட் பைக்கில் ஏராளமான அம்சங்களை வழங்கியுள்ளது. அதன்படி புதிய ராயல் என்பீல்டு 350 பைக்கின் டிசைன் மாற்றப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் புதிய ராயல் என்பீல்டு 350 பைக்கின் முன்புறம் சற்று நீளமான ஃபெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ராயல் என்பீல்டு 350 புல்லட் பைக்கின் டேங்கின் வடிவம் சற்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களை தவிர புதிய ராயல் என்பீல்ட் 350 புல்லட் பைக்கின் தோற்றம் அதன் முந்தைய மாடலின் தோற்றத்தை போலவே காட்சி அளிக்கின்றது. அத்துடன் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. முலும் க்ரோம் நிறத்தால் ஆன பாகங்கள், பாரம்பரியப்படி உருவான டிசைன் ஆகியவை உள்ளது.

தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய புல்லட் 350 மாடலில் கிளாசிக் 350, ஹண்டர் 350, மீடியோர் 350 மாடல்களில் உள்ளதை போலவே 349 சிசி கொண்ட சிங்கில் சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை கொண்டது. இத்துடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ராயல் என்பீல்டு 350 புல்லட் பைக்கில் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க்குகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் ரியர் ஷாக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங்கிற்கு இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பேஸ் வேரியன்டில் மட்டும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ராயல் என்பீல்ட் புல்லட் 350 மாடலின் விலை 173000 எக்ஸ் ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய ராயல் என்பீல்ட் புல்லட் 350 மாடலின் விலை ஹண்டர் 350 மாடலின் விலைக்கும் கிளாசிக் 350 மாடலின் விலைக்கும் இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ராயல் என்பீல்ட் புல்லட் 350 மாடலின் விற்பனை செப்டம்பர் 3ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.