ADMK AMMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அது தற்போது வரை சரியாவதாக தெரியவில்லை. அந்த பிரச்சனை கூட்டணி கட்சி வரை வெடித்தது. இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக இபிஎஸ் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவதை பலரும் விமர்சித்து வந்தனர்.
வழக்கம் போல இபிஎஸ்-யை விமர்சித்த டிடிவி தினகரன், கரூர் சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார். பதவி வெறியில் எடப்பாடி வழக்கம் போல் பேசுகிறார் என்றும், கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்று கூறுவது கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் கூறினார். இதற்கு பதிலடியாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அரசியலில் உங்களுடைய தோல்வியை தங்கி கொள்ள முடியாமல் பொறாமையில் இவ்வாறு பேசி வருகிறிர்கள், உங்களை நம்பி வந்தவர்களை நாடு ஆற்றில் விட்டவர் தானே நீங்கள்.
உங்களை நம்பி கையெழுத்து போட்டவர்கள் நிலைமை இப்பொழுது என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார். இன்னும் பலர் உங்களை விட்டு எப்போது ஓடலாம் என்று பார்த்து கொண்டிருகிறார்கள். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? டிடிவி தினகரன் அவருடைய இருப்பை காட்டி கொள்ள இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை முன் வைத்து வருகிறார் என்றும் கூறினார்.