RR மற்றும் KKR அணிகள் இன்று மோதல்!! பிளே ஆப் சுற்றுக்கு முக்கியமான போட்டி இதுதான்!!

0
206
RR and KKR clash today!! This is the important match for the play-off round!!
RR and KKR clash today!! This is the important match for the play-off round!!
RR மற்றும் KKR அணிகள் இன்று மோதல்!! பிளே ஆப் சுற்றுக்கு முக்கியமான போட்டி இதுதான்!!
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இரண்டு அணிகளுமே விளையாடவுள்ளது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி அதில் 5 வெற்றிகள் பெற்றுள்ளது. 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் தற்போது பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் பெற்று 6 தோல்விகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட ரன் ரேட்டில் +0.38 மதிப்பெண் பெற்றுள்ளதால் 5வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். அதே சமயம் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதற்கு இரண்டு அணிகளுமே வெற்றி பெற்று ஆக வேண்டும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Previous articleபொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு!! 5 பேரை கைது செய்த காவல்துறை!!
Next articleமேலும் ஒரு படகு விபத்தால் மக்கள் பலி!! சோகத்தில் மூழ்கிய நாட்டு மக்கள்!