ஆர்.ஆர்.ஆர் திரைப்பட நடிகர் காலமானர்! இரங்கல் தெரிவித்த ஆர்.ஆர்.ஆர் படக்குழு!!

Photo of author

By Sakthi

ஆர்.ஆர்.ஆர் திரைப்பட நடிகர் காலமானர்! இரங்கல் தெரிவித்த ஆர்.ஆர்.ஆர் படக்குழு!
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடித்த வெளிமனநாட்டு நடிகர் ரே ஸ்டீவன்சன் அவர்கள் காலமானார். இதையடுத்து இவரது மறைவிற்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நடிகர் ரே ஸ்டீவன்சன் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 1998ம் ஆண்டு வெளியான தி தியரி ஆப் பிளைட் திரைப்படம் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர். இவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தோர் சீரிஸ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதாவது ஒல்ஸ்டாக் எனும் கதாப்பாத்திரத்தில் தோர், தோர் தி டார்க் வோர்ல்ட், தோர் தி ரக்னோராக் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து இவர் இயக்குநர் ராஜமௌலி இயக்கி 2022ம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் பிரிட்டிஷ் கவர்னர் ஸ்காட் துறை கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இதையடுத்து இவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரே ஸ்டீவன்சன் இறப்பிற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குநர் ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் படக்குழு மற்றும் ரசிகர்கள் பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவு செய்தியை கேட்டு ஆர்.ஆர்.ஆர் படக்குழு டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. அதில் “நமது குழுவிற்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. ரெஸ்ட் இன் பீஸ் ரே ஸ்டீவன்சன். நீங்கள் என்றும் எங்கள் இதயத்தில் ஸ்காட் துறையாக நிலைத்திருப்பீர்” என்று பதிவிட்டுள்ளது.