ஜப்பான் நாட்டில் சாதனை படைத்த RRR!! இவ்வளவு கோடி வசூல் செய்ததா??

Photo of author

By Sakthi

ஜப்பான் நாட்டில் சாதனை படைத்த RRR!! இவ்வளவு கோடி வசூல் செய்ததா??
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து பான் இந்திய படமாக  வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜப்பான் நாட்டில் 200 நாட்களுக்கு வெற்றிகரமாக ஓடியுள்ளது. மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வசூல் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படமானது உலகம் முழுவதும் சேர்த்து 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து இந்த திரைப்படம் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஜப்பான் நாட்டிலும் ரிலீஸ் ஆனது.
ஜப்பான் நாட்டு மக்களும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து ஜப்பான் நாட்டில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 200 நாட்களுக்கு வெற்றிகரமாக ஓடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஜப்பான் நாட்டில் மட்டும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 119 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.