நான் சொல்றேன் எழுதி வச்சுக்கங்க அது நிச்சயமா நடக்கும்! அமைச்சர் பரபரப்பு பேச்சு!

Photo of author

By Sakthi

நான் சொல்றேன் எழுதி வச்சுக்கங்க அது நிச்சயமா நடக்கும்! அமைச்சர் பரபரப்பு பேச்சு!

Sakthi

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆம்பூர், வாணியம்பாடி, உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம், பேரூராட்சிகள் போன்ற பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நகராட்சியில் இருக்கின்ற 36 வார்டுகளிலும், திமுக போட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அரசியல் கட்சி என்றால் ஆசைப்பட வேண்டும் அதில் எந்தவிதமான தவறும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் கூட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுத்த அண்ணா அவர்களின் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆகவே அவருடைய வழி நடந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் உடன்பிறப்புகள் திமுக கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் நாம் போட்டியிடும் அனைத்து பகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதிகளில் கூடுதலாக ஒரு மணி நேரம் பணிபுரிய வேண்டும். சட்டப்பேரவையில் கூட்டணியில் இருக்கும் நம்முடைய அன்பு சகோதரர்களுடன் நாம் தற்போதும் இணைந்திருக்கிறோம் என்று அவர் உரையாற்றியிருக்கிறார்.

வாணியம்பாடியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வாணியம்பாடி நகராட்சி 36வார்டுகள் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி 15-வார்டு உள்ளிட்டவற்றை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்று கொண்டு உரையாற்றிய அவர் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறோம். அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். நான் தெரிவிக்கிறேன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அந்த பணத்தை வழங்குவோம் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.