கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.அதிலும் நோய் தொற்று பரவுதலின் வீரியத்தை குறைக்க,கட்டயாம் முக கவசம் அணிய வேண்டும் என்றும்,சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் பல்வேறு விதிமுறைகள் அனைத்து உலக நாடுகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.இதனால் பொருளாதாரத்தை மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் ஸ்பெயினில் பொருளாதரத்தை மீட்டெடுக்கும் வகையில் அந்நாட்டு சுற்றுலாத் தளங்களை திறந்து, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் புதிய யுத்தியை கையாண்டு உள்ளது ஸ்பெயின்.
இதன் மூலம் அங்கு இருக்கும் தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் போது அவர்கள் அனைவரும் முகக்கவாசம் அணிய கட்டாயப்படுத்தப்பட்டு உணவகத்திற்கு வெளியே சாப்பிடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 8,542 (90 பவுண்ட்) வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அபராதம் வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அப்படியும் மீறுபவர்களிடம் இருந்து தான் அபராதம் வசூலிக்க படும் என்றும் அன்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.மேலும் விதிமுறைகளை மீறும் நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.