சூரியனை பார்த்து நாய் குரைத்தால்! சூரியனுக்கு எந்த அவமானமும் இல்லை ஆர். எஸ். பாரதி கெத்தான பேச்சு!

Photo of author

By Sakthi

நாங்கள் புலி வேட்டைக்குச் சென்று கொண்டிருக்கின்றோம் எங்களது கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அதிமுகவிற்கு தந்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் சம்பந்தமாக அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சம்பந்தமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்து இருக்கின்றார் அவர் பேசியதாவது.

எங்களுடைய தலைவர்களைப் பொருத்தவரையில் இமயமலைக்கு சமமாக அரசியலில் இருந்து வருகின்றார்.

இமயமாக இருக்கிற எங்களுடைய தலைவர் தளபதியை பார்த்து ஒரு நாய் குரைத்ததாக தான் நாங்கள் நினைக்கின்றோம்.

இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி, எங்களுக்கு பழக்கம் கிடையாது. ஒரு நல்ல அரசியல்வாதியை பற்றி கேட்டால், நான் தாராளமாக பதில் சொல்வேன்.

எங்களுக்கு கொள்கைகள் இருக்கின்றதா இல்லையா என்று எழுபது வருடகால எங்களின் கட்சி கூறும் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

எங்களுடைய தலைவர் ஐம்பது வருடகால வரலாற்றில் முக்கிய அரசியல் தலைவராக இருந்து வருகின்றார்.

அவரை விமர்சிக்கும் எல்லோருக்கும் எங்களால் பதில் சொல்ல இயலாது.

பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பதில் கூற இயலும். நாங்கள் புலி வேட்டைக்குப் போய் கொண்டிருக்கின்றோம் எங்களால் எலிகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்திருக்கின்றார்.