Breaking News

ஆளும் கட்சியின் இரண்டு ஆண்டுகள் ஆட்சி!! சாதனை மலராக வெளிவரும் திமுக அரசின் சாதனைகள்!!

ஆளும் கட்சியின் இரண்டு ஆண்டுகள் ஆட்சி!! சாதனை மலராக வெளிவரும் திமுக அரசின் வெற்றிகள்!!

திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறவுள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள், செய்த சாதனைகள் அனைத்தும் சாதனை மலராக வெளியாகவுள்ளது. இதனை இன்று முதல்வர் வெளியிடவுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் சாதனை படைத்து ஆட்சியை கைப்பற்றியது. திமுக கட்சியின் சார்பாக மு.க ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

திமுக கட்சி ஆட்சியை கைப்பற்றிய பிறகு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. மேலும் சொல்லாத சில திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது.

இதையடுத்து இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகள் அனைத்தும் மலர் வடிவில் அதாவது புத்தகம் வடிவில் வெளியாகவுள்ளது. “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்று அந்த சாதனை மலருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அரசின் முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திமுக அரசின் சாதனை மலரை இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிடவுள்ளார். சட்டப் பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்த உரைகள், அறிவிப்புகள் உள்ளிட்டவையும் இந்த சாதனை மலரில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.