Russia: ஹைப்பர் சோனிக் என்னும் ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய ஏவுகணை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்த திட்டம்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால் மூன்று ஆண்டுகள் நிறைவு பெறும். ரஷ்யா போன்ற வலிமை மிக்க நாட்டுடன் உக்ரைன் தொடர்ந்து போர் புரிந்து வர உறுதுணையாக இருப்பது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் உதவிதான்.
உக்ரைன் நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் ஏவுகணை வழங்கி வருகிறது அமெரிக்கா. இந்த ஏவுகணை உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக யுத்த சமீப காலமாக பயன்படுத்தி உள்ளது. இதனால் கோபமுற்ற ரஷ்யா அதிபர் புதின் அணு ஆயுதங்களை போரில் பயன்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
அதற்காக ரஷ்ய எல்லையில் கதீர் வீச்சு பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள “பங்கர்கள்” உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உக்ரைனில் உள்ள டினிப்ரோ நகரின் மீது (Oreshnik) ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது ஒளியை விட பத்து மடங்கு வேகமாக செல்லக் கூடியது ஆகும்.
மேலும் அமெரிக்க போர் விமானப்படை தளங்களில் ஹைப்பர் சோனிக் ஏவுகணை கொண்டு தாக்க ரஷ்யா முடிவு செய்து உள்ளது. மேலும், அமெரிக்கா மட்டுமின்றி பிற நாடுகளில் உள்ள அமெரிக்காவின் 9 பாதுகாப்பு படை தளங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் புள்ளியாக தாக்கும். அதாவது, 2,100 கிலோமீட்டர் தொலைவில் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்தை இந்த ஏவுகணை 11 நிமிடத்தில் தாக்க முடியும். இதனால் அமெரிக்கா அச்சத்தில் உறைந்து உள்ளது.