எங்களிடம் எரிவாயு வாங்குபவர்கள் இதை செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்! உலகநாடுகளுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த விளாடிமிர் புட்டின்!

Photo of author

By Sakthi

ரஷ்ய நாணயத்தில் எரிவாயு வாங்குவது குறித்து உலக நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று புதிய எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதில் தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிளை கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இன்று முதல் இது அமலுக்கு வருவதாகவும், கூறியிருக்கிறார்.

இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு ஆரம்பிக்கப்படும் அவற்றின் மூலமாக வெளிநாட்டு பணம் ரூபிளாக மாற்றப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் குறிப்பிடும்போது யாரும் எங்களுக்கு இலவசமாக கொடுக்கவில்லை.

நாங்கள் தொண்டு செய்யவுமில்லை ஆகவே ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இத்தாலி, ஜெர்மனி, உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிவாயுவை பெரிய அளவில் நம்பி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.