ரஷ்யாவின் இறுதிக்கட்ட தாக்குதல்! முக்கிய நகரங்களை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷ்ய ராணுவம்!

0
246

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்னமும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ஆனாலும் ரஷ்யாவின் மும்முனைத் தாக்குதலால் பல சேதங்களை சந்தித்திருக்கிறது. பல நகரங்கள் ரஷ்யா வசம் வந்துவிட்டது.

தற்போது உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அங்கிருக்கின்ற தொழில் நகரமான செவிரோடோ, டொனஸ்கின் 80 சதவீத ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

மீதம் இருக்கின்ற 20 சதவீத பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ரஷ்யா தொடர் தாக்குதலில் இறங்கியிருக்கிறது.

அந்த நகரத்திலுள்ள அசோட் ரசாயன ஆலையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்த ஆலைமீது ரஷ்யப்படையை சார்ந்தவர்கள் கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறார்கள்.

அதோடு செவிரோடோ டொனட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் தங்கியிருக்கிறார்கள். முக்கிய பாலங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டிருப்பதால் அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அத்துடன் செவிரோடோ டொனட்ஸ்க் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கின்ற 3 முக்கியப்பாலங்களை ரஷ்ய படையைச் சேர்ந்தவர்கள் தகர்த்தெரிந்தனர்.

ஆகவே அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் உக்ரைன் படையினர் மேலும் முன்னேற முடியாமல் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.

போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக சுமார் 1 லட்சம் பேர் வசித்து வந்த செவிரோடோ டொனட்ஸ்க் நகரில் தற்சமயம் 12 ஆயிரம் பேர் தங்கியிருக்கிறார்கள்.

முக்கிய பாலங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டிருப்பதால் அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அந்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ரஷ்ய படைகளின் இறுதித் தாக்குதல் நடத்தி வருவதால் அந்த நகரம் இன்னமும் ஓரிருநாளில் விழுந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

லுகர்மான்ஸ் மகாணத்திலுள்ள உக்ரைன் கட்டுப்பாட்டிலுள்ள டொனட்ஸ்க்கை கடைசி பெரிய நகரமான செவிரோடோ டொனட்ஸ்க்கை கைப்பற்றிவிட்டால் அந்த மாகாணம் முழுவதுமாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் பிரபல பிரவுசிங் நிறுவனம்!
Next articleபெண்களை கீழ்மட்டமாக நடத்தினால் இது தான் தண்டனை! கூகுள் நிறுவனத்தில் வேலை செய்த பெண்களுக்கு ரூ.920 கோடியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here