ரஷ்ய அதிபர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Photo of author

By Sakthi

ரஷ்ய அதிபர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு! முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Sakthi

நோய் தொற்று நோய் பரவல் காலத்திலும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நட்புறவின் வேகத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை நம் சிறப்பான மற்றும் சீர்மிகு ராணுவ உறவு தொடர்ந்து வருகிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார், முதல் முறையாக இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ துறையின் அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதனை தவிர்த்து ராணுவ ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்களும் நேற்று கையெழுத்தாகி இருக்கின்றன. நோய்கள் காரணமாக வெளிநாட்டு பயணங்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபருடன் ஜெனிவாவில் சந்தித்தார், அதன்பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்று சொல்லப்படுகிறது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்டோர் 2019ஆம் ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டின்போது சந்தித்து பேசினார்கள், அதன்பிறகு இருவருக்கும் இடையே நடக்கும் சந்திப்பு இது என்று சொல்லப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாவது நோய்த்தொற்று பரவல் பலர் அவர்களை நமக்கு கிடைத்திருக்கிறது ஆனாலும் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நட்புறவு வளர்ச்சி வேகத்தில் எந்தவிதமான மாற்றமும் உண்டாகவில்லை. கடந்த பத்து வருடங்களில் இந்த உலகம் பல மாற்றங்களை சந்தித்து இருக்கிறது, அரசியல் ரீதியில் உலக நாடுகள் இடையே மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் நம்முடைய இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பான மற்றும் சீர்மிகு இராணுவ உறவு தொடர்ந்து வருகிறது. முதல்முறையாக இரு நாடுகளின் இரண்டு அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. இது நம்முடைய இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் எதிர்காலத்தை உறுதி செய்து இருப்பதாக அமைந்திருக்கிறது என கூறியிருக்கிறார்.

இந்த சந்திப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் தெரிவித்ததாவது, காலம் பல சோதனைகளை ஏற்படுத்திய போதும் நம்முடைய இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு அதையும் தாண்டி நீடித்து வருகிறது. உலகின் மிக வலுவான அதிகார மிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அதை விட எங்களுடைய மிகச் சிறந்த நட்பு நாடாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது, இருநாடுகளுக்கு இடையேயான உறவு தொடர்ந்து வளர்ந்து வருவதை நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்குபெறும் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது, இதில் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். ரஷ்யாவின் சார்பாக ரஷ்யாவின் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். இதில் இந்திய நாட்டின் வடக்கு எல்லையில் அண்டை நாடான சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ராணுவ ஒத்துழைப்பு குறித்து இருபதாவது மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது இதில் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய ராணுவ அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. இருநாடுகளும் ஒன்றாக இணைந்து உருவாக்கி இருக்கின்ற இந்தோ ரஷ்யா ரைபில் நிறுவனம் மூலமாக உத்தரபிரதேசத்தில் இருக்கின்ற அமேதியில் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 5000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலமாக இந்தியாவின் ராணுவத்திற்கு 6 லட்சம் துப்பாக்கிகள் கிடைக்க இருக்கின்றன. அடுத்த பத்து வருடங்களுக்கு இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு வழங்கும் ஒப்பந்தம் உள்ளிட்டவை நேற்று கையெழுத்தாகி இருக்கின்றன.