உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தும்  ரஷ்யா!! மூன்றாம் உலகப் போர் தொடங்கும் அபாயம்!!

Photo of author

By Sakthi

Ukraine – Russia: உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த உள்ளதாக ரஷ்யா அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பு நாடுகளுடன் இணையக் கூடாது என்பதற்காக கடந்த 022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் உக்ரைன் மீது போர்  தாக்குதலை செய்து வருகிறது ரஷ்யா. உக்ரைன்  நாட்டின்  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருவதால் உக்ரைன் ரஷ்யா எதிராக பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் தொடங்கி 2 வருடங்கள் ஆகின்றன.

இது வரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போர் 1000 ஆயிரம் நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்துள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் ராணுவத்தினர் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறார்.

தற்போது  அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று உள்ள டிரம்ப்  தனது பிரச்சாரத்தில் உக்ரைன் போரை நிறுத்த உறுதி அளித்து இருந்தார். இந்த அணு ஆயுதங்கள் மூலம் நீண்ட தூரம் சென்று மிக துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டவைகள்  ஆகும்.
இதனால் ரஷ்யா நாட்டிற்கு உள்ளே சென்று தாக்குதல் நடத்த முடியும்.மேலும் உக்ரைனும் ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா அதிபர் புதின் அணு ஆயுதங்களை உக்ரைன் மீதான போரில் பயன்படுத்த உடன்படிக்கையில் கையெழுத்து செய்துள்ளார். இதனால் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.