Syria:சிரியாவில் அரசுக்கு ஆதரவாக போரில் இறங்கிய ரஷ்யா ராணுவம்.
சிரியா நாட்டில் கடந்த 2000 ஆம் ஆண்டு பதவியேற்ற அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போர் புரிந்து வருகிறார்கள். இவர் சிரியா நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் ஷியா முஸ்லீம் வகுப்பை சேர்த்தவர் என்பதனாலேயே, பெரும்பான்மையாக இருக்கும் சன்னி வகுப்பு முஸ்லிம் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் தலைமையில் அதிபர் பஷர் அல் அசாத்க்கு எதிராக அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டு வந்தது.
மேலும் சிரியா நாட்டின் முக்கிய நகரமான அலெப்போவை கைப்பற்றி உள்ளனர். இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவாக சவுதி அரேபியா, அமெரிக்க நாடுகள் உதவி செய்து வருகிறது. மேலும் இந்த கிளர்ச்சி குழுக்கள் இட்லிப் நகர், ஹமா மாகாணத்தில் உள்ள பிற நகரங்களை கைப்பற்ற முயற்சி செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தனால் சிரியா அரசு ஈரான், ரஷ்யா என இரண்டு நாடுகளுடன் நல்ல உறவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிபர் பஷர் அல் அசாத்து ஆதரவாக போரில் ஈடுபட ரஷ்யா ராணுவ ஜெனரல் செர்ஜி சுரோவிகி மீண்டும் சிரியாவுக்கு அனுப்ப ரஷ்யா அதிபர் புதின் முடிவு செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் இருக்கும் பகுதிகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கிறது ரஷ்யா.
இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அப்பாவி பொது மக்கள் இறந்து இருப்பதாக பிரிட்டன் நாட்டு ஊடகம் தெரிவித்து இருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் சிரியா அதிபரின் நட்பு உறவு முறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.