விஜய் மக்கள் இயக்கம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் கட்சியாக மாறி இருக்கிறது. எனவும் கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
கட்சியின் தலைவராக பத்மநாபன் அவர்களும், பொதுச் செயலாளராக எஸ்ஏ சந்திரசேகர் அவர்களும், என்று குறிப்பிடப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
நடிகர் விஜயின் தகப்பனார் எஸ் ஏ சந்திரசேகர், அவர்கள் இதனை தன்னிச்சையாக அறிவித்திருக்கின்றார். இதன் காரணமாக அவருடைய குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு இருக்கின்றது. அதோடு விஜயின் அம்மா விஜய்க்கு ஆதரவாக இருக்கின்றார், என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதுபற்றி கருத்து தெரிவித்து இருக்கின்ற எஸ்ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை நான் தான் விண்ணப்பித்து இருக்கின்றேன் இது என்னுடைய முயற்சி மட்டும்தான்.
இது விஜய்யின் அரசியல் கட்சி இல்லை இதற்கும், விஜய்க்கும், எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று தெளிவாக கூறியிருக்கின்றார்.
ஆனாலும் நடிகர் விஜய் தன் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ தன்னுடைய அகில இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் பெயரையோ சம்பந்தப்படுத்தி ஏதாவது விவகாரங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருக்கின்றார்.
அவருடைய பெயரில் கட்சி தொடங்கவில்லை அவருடைய பெயரில் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு.
இது ரசிகர் மன்றமாக மாறியிருக்கின்றது. அதில் இருக்கின்ற தொண்டர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக பதிவு செய்திருக்கிறேன்.
ஆனாலும், விஜய் சொன்னதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் நான் எந்த நோக்கத்தில் கட்சியை பதிவு செய்தேன் என்பதை தனித்தனியாக என்னை பேட்டி எடுங்கள் அப்போது உங்களுக்கு கூறுகிறேன்.
நல்லதை நினைத்து தான் ஆரம்பித்து இருக்கின்றோம் நல்லது நடக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.