நீட் தேர்விற்கு எதிராக போராடி வரும் முன்னாள் அரசு ஆசிரியர் சபரிமாலா
தனது அரசு வேலையை கூட தூக்கி எறிந்து விட்டு,நீட் தேர்விற்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்.
நீட் தேர்வு மட்டுமின்றி சமூக பிரச்சனைக்கு எதிராகவும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.அதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிராக நடக்கும் ஆணாதிக்கத்தை எதிர்த்தும் போராடி வருகிறார். ஜூலை மாதம் பெண் விடுதலைக் கட்சி என்ற பெயரில் அரசியல் அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.
பெண்களுக்கும் அரசியல் வேண்டும்.பெண்கள் என்றால் வீட்டையும் பார்த்துக்கொண்டு சமையல் செய்து பிள்ளைகளை மட்டும் பெற்று கொள்ளவேண்டும் என்ற அடிமைத்தனத்தை உடைத்தெரியவே இந்த பெண் விடுதலை கட்சி என்ற அமைப்பை தொடங்கி உள்ளேன் என்று பேசியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் பெண் விடுதலை கட்சி கூட்டம் ஒன்றில் அவர் பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதிவேற்றுவதை பற்றி அதில் பேசி இருந்தார்.
பெண்கள் தாங்கள் அழகா இருக்கிறோம் என்பதை அனைவரும் பார்க்க வேண்டும்.பிறர் ஆண்கள் அதற்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் போடவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவேற்றுவதும்,என்னுடைய அழகை எக்ஸ்போக்ஸ் செய்கிறேன் என்றால் அது.. விபச்சாரம்தான்!, என்று சபரிமாலா தனது உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அவரின் பேச்சிற்கு ஒரு சாரார் எதிர்ப்பும் இன்னொரு சாரார் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அவர் கூறியது உண்மை என்பது போல் தான்,சமூக வலைதளத்தில் இது போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. பெண்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் சிலரால் திருடப்பட்டு வருகிறது. அந்த புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தும் சூழல் இருந்தாலும்,அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஏன்? நடிப்பு என்ற பெயரில் சிலர் இதை செய்வது என்பது கேள்விக்குறியாக உள்ளது.