வருடாந்திர நிறைப்புத்தரிசி பூஜைக்காக இன்று திறக்கப்படும் ஐயப்பன் கோவில் நடை!

Photo of author

By Sakthi

வருடாந்திர நிறைப்புத்தரிசி பூஜைக்காக இன்று திறக்கப்படும் ஐயப்பன் கோவில் நடை!

Sakthi

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் நிறைப்புத்தரிசி பூஜை நடக்கும்.அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான நிறைப்புத்தரிசி பூஜை எதிர்வரும் 4ம் தேதி அதாவது நாளை நடைபெறவிருக்கிறது.

இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளைய தினம் அதிகாலை கோவில் நடை திறந்தவுடன் 6 மணியளவில் இந்த பூஜை நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இதற்காக செட்டிகுளங்கரா கோவில்வளாகத்தில் இருக்கின்ற வயலிலிருந்து சபரிமலை நிறைப்புத்தரிசி பூஜைக்காக எடுத்து வரப்படும்.

இந்த பூஜை நடைபெற்று முடிந்த பிறகு நாளைய தினம் இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும் என்கிறார்கள்.