ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் அதிகமான விலைகொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் அவர்களை ஏலத்தில் எடுத்திருக்கிறது . அவருடைய ஏலத்தொகை இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரூபாய் 16 புள்ளி 25 கோடி என்று சொல்லப்படுகிறது.
இப்படி பல அணிகளும் போட்டி போட்டு முன்னணி வீரர்களை ஏலம் எடுத்து வந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அர்ஜுன் டெண்டுல்கர் வெகு நாட்களுக்குப் பின்னர் சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடினார் மேலும் அவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை அதன் காரணமாக அவரை மும்பை அணி ஏலத்தில் எடுக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் ரசிகர்கள் எல்லோரும் மும்பை அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக ஏலத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறார்.
அண்மையில் கிளப் போட்டி ஒன்றில் அர்ஜுன் டெண்டுல்கர் 31 பந்துகளில் 77 ரன்கள் எல்லோரையும் வியக்க வைத்தார். ஆனாலும் இதைத்தவிர அவர் பெரிய அளவில் எதையும் செய்யவில்லை குறிப்பிட்ட அளவிற்கு எந்த போட்டியிலும் பெரிதாக சோபிக்கவில்லை என்று சொல்கிறார்கள்.
இவரை விட நன்றாக விளையாடும் அணி வீரர்கள் இருந்தாலும்கூட சச்சினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் இத்தனை லட்சங்களுக்கு ஏலம் எடுத்தது எல்லோரையும் கோபம் வரச் செய்திருக்கிறது. உண்மையில் நன்றாக விளையாடக்கூடிய எத்தனையோ வீரர்கள் இருக்கும் சமயத்தில் இன்னொருவரின் எதிர்காலத்தை இருட்டாக்கி விட்டு சச்சினின் மகன் இந்த இடத்துக்கு வந்திருப்பது சமூக வலைதளங்களில் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.