மீண்டும் ஒரு செல்பி வெளியிட்ட சசிதரூர்! இவர்களுடன் என்பதால் வைரல் ஆக வாய்ப்பு குறைவு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கி உள்ளது. நேற்றுதான் அதன் முதல் நாள் ஆரம்பித்தது. அந்த கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே இதை அறிவித்திருந்தாலும், நேற்று தான் கையெழுத்தானது. முதலில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு பாராளுமன்றத்தில் வேளான் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் வேளாண் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதை நிறைவேற்றும் போது எதிர்க்கட்சிகளின் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அந்த அமளிகளுக்கு இடையேயும் இந்த மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட மசோதா இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அந்த கூட்ட தொடர் முடிவடைந்ததும் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தனது டுவிட்டரில் பக்கத்தில் 6 பெண்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதில் இவர்கள் எல்லாம் திரிணாமுல் காங்கிரசின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சசி தரூருடன் போஸ் கொடுத்தனர். இவர்கள் அனைவரும் அவருடன் இணைந்து போட்டோ எடுத்து இருந்தனர். இதனை பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர்.
அது நாளடைவில் நமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு செயல்தானே. ஒரு ஆண் பெண்ணிடம் பேசினாலோ அல்லது பெண் ஆணிடம் பேசினாலும் அதை ஒரு வினோத விஷயமாக பார்ப்பார்கள். அப்படி அந்த விஷயம் காரணமாகத்தான் அந்த புகைப்படம் மிகவும் பரவலாக, அனைவராலும் பகிரப்பட்டது. இதனை பலரும் பல்வேறு விதமாக விமர்சித்தாலும், சசிதரூர் இதற்கு எளிமையாக விளக்கம் அளித்தார்.
சக பெண்களுடன் செல்பி எடுத்தது வெறும் பணியிட தோழமையின் நிகழ்ச்சி மட்டுமே என்றும் கூறியிருந்தார். நேற்று அந்த ஒரு புகைப்படத்தின் மூலம் சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் எம்பி சசிதரூர் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலாக இது என்பது போல பதிவிட்டுள்ளார்.
இதில் அவருடன் இந்த புகைபடத்தில் முழுவதும் ஆண்கள் உள்ளனர். இந்த புகைப்படத்தில் தன்னை ஒரு சமவாய்ப்பு குற்றவாளி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகது பாருங்கள் என்றும் அதோடு குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அதில் இருப்பவர்கள் அனைவரும் ஆண் எம்.பி. கள் அவ்வளவுதான்.