பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

Photo of author

By Hasini

பலியான கர்ப்பிணி மருத்துவர்! முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

கடந்த வருடம் 2019 ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டை விட தற்போது அதன் இரண்டாவது அலையில் தன் கோர தாக்கத்தை காட்டுகிறது. இந்த முறை வயதானவர்களையும், சிறு குழந்தைகளையும் மிகவும் பாதிக்கிறது.

போர்கால அடிப்படையில் தற்போதைக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், இரண்டு டோஸ்கள் போடவேண்டும் என்றும் அறிவுறுதப்பட்டாலும், மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக அனைவரையும் மருந்துகள் சென்று சேர்வதில்லை.

இதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கூட விதிவிலக்கல்ல என்பது போல் ஒரு அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நடந்தேறியுள்ளது.மருத்துவர் சண்முகப்ரியா மதுரை மாநகரில் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக உள்ளார்.இவர் இரண்டு வருடங்களுக்கு முன் ஹோட்டல் அதிபரை காதல் திருமணம் புரிந்துள்ளார்.

தற்போது 8 மாத கர்ப்பிணியான இவர் கொரோனா இரண்டாவது அலையில் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் வீட்டில் அனைவரும் எத்தனையோ முறை வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார்.இதில் இவருக்கு கொரோனா பாசிடிவ் அறிகுறி தோன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கர்ப்பிணியான  மருத்துவர் தொற்றின் காரணமாக உயிரிழந்தது அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது

இதுகுறித்து தமிழக முதல்வர் கூறிய அறிக்கையில், மருத்துவர் சண்முகப்பிரியா இளம்வயதிலேயே பெரும்தொற்றின் காரணமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது என்றும், இதனால் மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அறிவுறுத்தியதாகவும் கூறினார்.மேலும் மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும்,அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.